முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழங்குடியின மூதாட்டிக்கு செருப்பு அணிவதற்கு உதவிய பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

பீஜப்பூர்: சத்தீஸ்கரில் பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியின மூதாட்டி ஒருவருக்கு செருப்புகளை அணிவதற்கு உதவி செய்தது அங்கு வரவேற்பை பெற்றுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இது நடந்ததால் அனைவரும் ஆச்சரியத்தில் ஆரவாரம் செய்தனர்.

சத்தீஸ்கரின் பீஜப்பூர் நகரம் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகும். இங்கு டெண்டு இலைகளை பறிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். மாநிலத்தின் வனத்துறை உற்பத்தி கழகத்தின் சார்பில் குடும்பத்தின் டெண்டு இலைகளை பறிக்கும் ஒருவருக்கு இலவச காலணி வழங்கும் விழா பீஜப்பூரில் நடைபெற்றது.

இதற்காக அங்கு வந்த பிரதமர் மோடி, அங்குள்ள பெண்கள், சிறுவர்களுடன் பேசி மகிழ்ந்தார். இதையடுத்து நடைபெற்ற விழாவில் மலைவாழ் பெண்களுக்கு காலணி வழங்கப்பட்டது. அப்போது காலில் செருப்பு அணியாமல் வந்த ஒரு பெண்ணுக்கு செருப்பை வழங்கியபோது அதை அவருக்கு பிரதமர் போட்டு விட்டார். யாரும் எதிர்பார்க்காத வகையில் இது நடந்ததால் அனைவரும் ஆச்சரியத்தில் ஆராவாரம் செய்தனர். பழங்குடியின மாவட்டமான பீஜப்பூருக்கு வரும் முதல் பிரதமர் மோடிதான். இவர் 4-வது முறையாக சத்தீஸ்கருக்கு வந்துள்ளார். அடுத்த ஆண்டில் இங்கு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து