மருத்துவத் துறையில் செவிலியர்கள் இருதயத்தைப் போன்றவர்கள் பதிவாளர் எஸ்.அனி கிரேஸ் கலைமதி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      தூத்துக்குடி
convocation

மருத்துவத் துறையில் செவிலியர்கள் இருதயத்தைப் போன்றவர்கள் என நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு நர்சஸ் அன்ட் மிட்வைவ்ஸ் கவுன்சில் பதிவாளர் டாக்டர் எஸ்.அனி கிரேஸ் கலைமதி பேசினார்.

பட்டமளிப்பு விழா

தென்னிந்திய திருச்சபை,தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் சார்பில் நாசரேத்-திருமறையூரில் செயல்பட்டு வரும் புனித லூக்கா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் றடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி-நாசரேத் திரு மண்டலப்பேராயர் எஸ்.இ.சி.தேவசகாயம் தலைமை வகித்து,மாணவிகளுக்கு பட்டங் கள் வழங்கி விழாப்பேரூரையாற்றினார்.விழா ஆரம்பஜெபத்தை திருமண்டல துணைத் தலைவர் எஸ்.ஜி.லூர்துராஜ்ஜெயசிங் ஏறெடுத்தார்.தாளாளர் டாக்டர் கமலிஜெயசீலன் வரவேற்று பேசினார்.சிறப்புவிருந்தினரை கல்லூரிமுதல்வர் டாக்டர் ஜெயராணி பிரேம் குமார் அறிமுகம் செய்து வைத்தார்.விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு நர்சஸ் அன்ட் மிட் வைவ்ஸ் கவுன்சில் பதிவாளர் டாக்டர் எஸ்.அனி கிரேஸ் கலைமதி பேசுகையில்:- இன்றைய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை எந்த கோர்சில் படிக்க வைத்தால் வேலை கிடைக்கும்,கிடைக்காது என்ற சந்தேகத்துடன் படிக்கவைத்து வருகின்றனர். ஆனால் ஒரே கல்லில் இரண்டு  மாங்கா என்று சொல்வார்கள் அதுபோல பி.எஸ்சி., நர்சிங் பட்டப்படிப்பை பயின்றால் படிப்பிற்கு பட்டமும்,வேலையும் கிடைக்கும்.இதற்கு தான் ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்று சொல்வார்கள்.  உலகத்தில் பிறப்பு, இறப்பு என்ற ஒன்று இருக்கும் வரை செவிலியர்களுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் கிடையவே கிடையாது. செவிலியர்களுக்கு நிறைய வேலை வாய்ப்பு உள்ளது. கடவுள் உங்களையும், என்னையும் செவிலியர் பணிக்கு தொண்டு செய்வதற்காகவே படைத்துள்ளார். இல்லாவிட்டால் இந்த துறைக்கு நாம் வந்திருக்கவே முடியாது.  இன்றைய பட்டமளிப்பு விழாவில் மாணவர்களாகிய நீங்கள் செவிலியர் துறையில் பணியாற்றுவதற்கான தகுதியும்,அதற்காக பதியவும்,அதற்கான அங்கீகா ரமும் இன்று முதல் பெறுவதற்கு தகுதி படைத்தவர்களாகிறீர்கள்.உங்களது பெயர் பலகையில் பெயருக்குபின்னால் ஆர்.என்.ஆர்.எம். என்று போடுவதற்கு தகுதி படைத் தவர்களாகிறீர்கள்.ஒரு மனிதனுக்கு எப்படி இருதயம் முக்கியமானதோ அதுபோன்று மருத்துவ துறைக்கு செவிலியர்கள்.மருத்துவத்துறையில் செவிலியர்கள் இருதயத்தை போன்ற வர்கள்.நாங்கள் செவிலியர்கள் என்றுகூறிக்கொள்வதில் பெருமைகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் நாசரேத் கதீட்ரல் தலைமைப் பாதிரியார் எஸ்.எட் வின் ஜெபராஜ் நிறைவு ஜெபம் செய்தார். பேராயர் ஆசி வழங்கினார்.விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன்,பேராயரின் துணைவியார் சாந்தினி தேவசகாயம்,நாசரேத் சேகரபொருளாளர் மர்காஷியஸ் தேவ தாஸ்,புனித யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து