முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் அன்னதான திட்டம் தொடக்க விழா

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      புதுச்சேரி

தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் தற்போது கோவில்களில் அன்னதான திட்டம் தொடடங்கப்பட்டு வருகிறது.

அன்னதான திட்டம்

கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி மணக்குள விநாயகர் கோவிலில் அன்னதான திட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர், புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள 10 கோவில்களில் அன்னதான திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கு அரசு நிதி அளிக்காது என்றும், அந்தந்த கோவில்கள் பகதர்களிடம் பெறும் நிதியில் இருந்து அன்னதான திட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.இந்த நிலையில் கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் அன்னதான கூடம் திறப்பு மற்றும் சம்பூர்ண அன்னதான திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு தலைமை தாங்கி அன்னதான கூடத்தை திறந்து வைத்தார். சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தனர். விழாவில் இந்து சமய அறநிலையத்துறை செயலர் சுந்தரவடிவேலு, ஆணையர் தில்லைவேல் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதான திட்டத்தின் படி கோவிலில் பிரதிவாரம் ஞாயிறு, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 100 பேருக்கு மதியம் வடை பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.அன்னதானம் வழங்க விரும்புவோர் ரூ.5 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என கோவில் சிறப்பு அதிகாரி மணிகண்டன் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து