விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்து கொள்முதல் நிகழ்ச்சி கலெக்டர் இல.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      விழுப்புரம்

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பாக, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மூலமாக அரசு ஆதரவு விலை திட்டம்-2018ன்கீழ் உளுந்து கொள்முதல் நிகழ்ச்சியை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,   தொடங்கி வைத்தார்.உளுந்து கொள்முதலை துவக்கி வைத்து கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்ததாவது:

உளுந்து கொள்முதல்

விழுப்புரம் மாவட்டத்தில் 2016-17ஆம் ஆண்டு சராசரி மழை அளவு 1060 மி.மீ.,-ஐவிட குறைவாக 563 மி.மீ. அளவே மழை பெய்தது. 110000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்ட 60500 மெ.டன் பயிறு வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 18 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வரப்பெற்ற மொத்த அளவு 25033 மெ.டன் மட்டுமே வரப்பெற்றது. உளுந்து மட்டும் 100000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு 55000 மெ.டன் உற்பத்தி செய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 18 ஒழுங்குமுறை கூடங்களுக்கு 19438 மெ.டன் மட்டும் வரப்பெற்றது.

2017-18ஆம் ஆண்டு 1083 மி.மீ. விழுப்புரம் மாவட்டத்தில் மழை பெய்தது. இதில் 97300 ஹெக்டேர் பரப்பளவில் 87570 மெ.டன் பயிறு வகைகள் உற்பத்தி செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு 37488 மெ.டன் வரப்பெற்றது. உளுந்து மட்டும் 90000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு 81000 மெ.டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 19 ஒழுங்குமுறை கூடங்களுக்கு வரப்பெற்ற மொத்த உளுந்து 29923 மெ.டன் மட்டுமே. 2017-18ம் ஆண்டு உளுந்து சராசரி விலை ஒரு குவிண்டாலுக்கு 4858 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. இந்த விலை மத்திய அரசின் குறைந்த பட்ச ஆதார விலையான ரூ.5400-க்கு குறைவாக உள்ளது.அதிக செலவு மேற்கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட உளுந்து பயிறுக்கு மத்திய அரசின் குறைந்த பட்ச ஆதார விலையான ஒரு குவிண்டாலுக்கு ரூ.5400- விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் நமது தமிழக அரசு தேசிய வேளாண்மை விற்பனை கூட்மைப்புக்கு (Nயுகுநுனு) உளுந்து கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.தமிழக அரசு, 3000 மெ.டன் உளுந்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம், Nயுகுநுனுக்கு சப்ளை செய்ய முடிவு செய்துள்ளது. அதில் 2250 மெ.டன் உளுந்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் மற்றும் விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும்.எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உளுந்து சாகுபடி செய்து, இருப்பு வைத்துள்ள விவசாயிகள் அனைவரும், இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி, அதிக விலைக்கு ஒழுங்குமுறை கூடங்கள் மூலம் விற்பனை செய்து பயனடையுமாறு கலெக்டர் இல.சுப்பிரமணியன், கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜ், விழுப்புரம் விற்பனை குழு செயலாளர் இராமச்சந்திரன், விழுப்புரம் விற்பனை குழு தனி அலுவலர் தனசேகரன், தேசிய வேளாண் பொருள்கள் மற்றும் பங்குகள் பரிமாற்றம் துணை மேலாளர் ராஜமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) செல்வசேகர், வேளாண்மை அலுவலர் சுரேஷ் மற்றும் விற்பனைக்குழு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து