பைக்கில் தவறி விழுந்த வாலிபர் படுகாயம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      திருச்சி

நாகப்பட்டினம் பூம்புகாரை அடுத்த சீர்காழியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சிவபாலன் (38) இவர் தனது பைக்கில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மருதுர் அருகே சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஒருவர் சைக்கிளில் சாலையை கடந்து சென்ற போது அவர்மீது மோதாமல் இருக்க பைக்கை சாலையோரம் மண் சாலையில் ஓட்டியபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.  அவரது நண்பர் ஜீயபுரம் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  படுகாயம் அடைந்த சிவபாலன் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து