மதுபானக்கடை கமலக்கண்ணன் இயக்கத்தில் நடிக்கும் சிபிராஜ்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      சினிமா
sibirajjpg

Source: provided

‘மதுபானக்கடை’ கமலக்கண்ணன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்க இருக்கிறார். ‘மதுபானக்கடை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கமலக்கண்ணன். அரசியலை நையாண்டி செய்யும் விதமாக இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.

ரஃபீக், ஐஸ்வர்யா, என்.டி.ராஜ்குமார், ‘பூ’ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வேத் சங்கர் இசையமைத்திருந்தார். 2012 ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. கிட்டத்தட்ட 6 வருடங்கள் கழித்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் கமலக்கண்ணன்.

இந்தப் படத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து