பத்திரிகையாளராக வரலட்சுமி நடித்துள்ள ‘வெல்வெட் நகரம்’

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      சினிமா
Vellalakshmi

Source: provided

மனோஜ்குமார் நடராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘வெல்வெட் நகரம்’. பெண்ணை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பகத்குமார் ஒளிப்பதிவு செய்ய, ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்கிறார்.மதுரையில் பத்திரிகையாளராகப் பணியாற்றும் வரலட்சுமி, பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான ஆதாரத்தைத் தேடி சென்னைக்கு வருகிறார்.


இங்கு அவர் சந்திக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் இந்தப் படம். மேக்கர்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் அருண் கார்த்திக் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார் மனோஜ்குமார்.

48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, கொடைக்கானல், மதுரை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து