வீடியோ: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடுகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள்

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      தமிழகம்
SALEM MUNICIPALITY

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடுகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் சேலம் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடுகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை பெறுவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு மேக்னசைட் சார்பில், பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ், ரூ.1.25 லட்சம் மதிப்பில் 5 இரண்டடுக்கு வாகனங்கள், சேலம் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை மாநகராட்சி ஆணையாளர் சதீஸ் முன்னிலையில், தமிழ்நாடு மேக்னசைட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கெஜலட்சுமி, கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர் ராஜேஸ்வரி, நிர்வாக செயலாளர் லட்சுமி மணியன், உதவி ஆணையாளர் ரமேஷ் பாபு, மாநகர நல அலுவலர் பிரபாகரன், சுகாதார அலுவலர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து