சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழு அடைப்புப் போராட்டம்

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      இந்தியா
andira 2018 04 16

அமராவதி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி அம்மாநிலத்தில் முழு அமைப்பு போராட்டம் நடந்தது. இதனால் அங்கு வாகனப்போக்குவரத்து முடங்கியுள்ளதுடன், கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலங்கானா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அப்போது ஆந்திராவுக்கு சிறப்பு நிதி, சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆண்டு பலவாகியும் சிறப்பு அந்தஸ்தை வழங்கவில்லை என்று ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு புகார் கூறினார். அத்துடன் மத்தியில் பாஜக கூட்டணியில் இருந்து விலகினார்.

இதற்கிடையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் தினமும் போராட்டம் நடத்தினர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்களும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. ஆந்திரபிரதேச பிரத்யேக ஹோடா சாதனா சமிதி அழைப்பு விடுத்துள்ள போராட்டத்திற்கு, காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், இடதுசாரிகட்சிகள் ஆதரவு தெரிவித்த பந்த் நடத்தினர்.

இதனால், ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளிலும் சாலைகள் வெறிச்சோடின. பெரும்பலான கடைகள் அடைக்கப்பட்டன. முழு அடைப்பையொட்டி ஆந்திர மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருப்பதியில் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. எனினும் போராட்டத்தறி்கு ஆளும் தெலுங்குதேசம் ஆதரவு தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து