அமைதியான முறையில் தீர்வு காண பாகிஸ்தானுக்கு ஐ.நா.அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      உலகம்
united-nations 2017 10 24

ஐ.நாடுகள் சபை, இந்தியாவுடன் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு பாகிஸ்தானுக்கு ஐ.நா.துணைப் பொதுச்செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணை பொதுச் செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். கடந்த 12-ம் தேதி பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் தெஹ்மினா ஜன்ஜூவா, வெளியுறவு அமைச்சக சிறப்பு செயலாளர் தஸ்னிம் அஸ்லாமை சந்தித்துப் பேசினார்.

அப்போது, இந்தியாவுடன் பாகிஸ்தானுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மிரோஸ்லாவ் அறிவுறுத்தினார். எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்தும் கவலை தெரிவித்தார். இதை ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து