முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 5 தமிழக வீரர்களுக்கு 2.20 கோடி ரூபாய் ஊக்கத்தொகை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், மேசை பந்து, ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற 5 தமிழக வீரர்களுக்கு ரூ.2 கோடியே 20 லட்சம் உயரிய ஊக்க தொகையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வாழ்த்துக்கடிதம்

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், மேசைப்பந்து ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் மற்றும் ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சரத் கமலுக்கு 50 லட்சம் ரூபாய் உயரிய ஊக்க தொகை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

பாராட்டுக்குரியது

அதன் விவரம் வருமாறு., ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ப் கோஸ்ட் நகரில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (2018) மேசைப்பந்து ஆடவர் இரட்டை பிரிவில் வௌ்ளிப்பதக்கம், ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருப்பதன் மூலம் இந்திய நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் நீங்கள் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். இந்த மகத்தான சாதனைக்காக தமிழ்நாடு அரசின் சார்பிலும் மக்கள் சார்பிலும் என இதயப்பூர்வமான வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக 3-வது பதக்கத்தை நீங்கள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பாராட்டுக்குரியது, சாதனைக்குரியது.

பரிசுத் தொகை உயர்வு...

2011 டிசம்பர் மாதம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வௌ்ளி பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.30 லட்சம், வெண்கலப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று பரிசுத் தொகையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே, இந்த உயர் ரொக்க ஊக்கத் தொகையை அதாவது ரூ.50 லட்சத்தை பெறுவதற்கு நீங்கள் தகுதியாகிறீர்கள். வீரர்களை ஊக்குவித்து அவர்களை உலகளவில் மேம்படுத்துவதற்காக நான் ஏற்கனவே அறிவித்திருக்கும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையையைத் தவிர இது வழங்கப்படும். மீண்டும் உங்களை பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் நாட்டின் சார்பில் பல வெற்றிகளைக் குவிக்க இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இதேபோல பதக்கங்கள் பெற்றிருக்கும் ஒவ்வொரு வீரர் வீராங்கனைகளையும் தனிப்பட்ட முறையிலும், தமிழக மக்கள் சார்பிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியிருக்கிறார். இது சம்பந்தமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் வாழ்த்து கடிதங்களையும் அனுப்பி இருக்கிறார்.

சத்யனுக்கு பாராட்டு

மேசைப்பந்து ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சத்தியனுக்கு 50 லட்சம் ரூபாய் உயரிய ஊக்க தொகை அறிவித்தும் வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த உயர் ரொக்க ஊக்கத் தொகையை அதாவது ரூ.50 லட்சத்தை பெறுவதற்கு நீங்கள் தகுதியாகிறீர்கள். வீரர்களை ஊக்குவித்து அவர்களை உலகளவில் மேம்படுத்துவதற்காக நான் ஏற்கனவே அறிவித்திருக்கும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையையைத் தவிர இது வழங்கப்படும். மீண்டும் உங்களை பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் நாட்டின் சார்பில் இது மாதிரி பல வெற்றிகளைக் குவிக்க இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் எடப்பாடி கூறியுள்ளார்.

தீபிகா கார்த்திக்...

ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் மற்றும் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் தீபிகா கார்த்திக்குக்கு 60 லட்சம் ரூபாய் உயரிய ஊக்க தொகை அறிவித்து வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த உயர் ரொக்க ஊக்கத் தொகையை அதாவது ரூ.60 லட்சத்தை பெறுவதற்கு நீங்கள் தகுதியாகிறீர்கள். மீண்டும் உங்களை பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் நாட்டின் சார்பில் இது மாதிரி பல வெற்றிகளைக் குவிக்க இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் எடப்பாடி கூறியுள்ளார்.

சவுரவ் கோஷல்

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சவுரவ் கோஷலுக்கு 30 லட்சம் ருபாய் உயரிய ஊக்க தொகை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த உயர் ரொக்க ஊக்கத் தொகையை பெறுவதற்கு நீங்கள் தகுதியாகிறீர்கள். மீண்டும் உங்களை பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் நாட்டின் சார்பில் இது மாதிரி பல வெற்றிகளைக் குவிக்க இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் எடப்பாடி கூறியுள்ளார்.

ஜோஸ்னா சின்னப்பா

ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஜோஸ்னா சின்னப்பாவுக்கு 30 லட்சம் ருபாய் உயரிய ஊக்க தொகை அறிவித்து வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த உயர் ரொக்க ஊக்கத் தொகையை பெறுவதற்கு நீங்கள் தகுதியாகிறீர்கள். மீண்டும் உங்களை பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் நாட்டின் சார்பில் இது மாதிரி பல வெற்றிகளைக் குவிக்க இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் எடப்பாடி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து