முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் சுகவனேஷ்வரர் கோவில் யானையை கருணைக் கொலை செய்ய ஐகோர்ட் அனுமதி

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, சேலத்தில் நோய்வாய்ப்பட்டுள்ள கோவில் யானையை கருணைக் கொலை செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

யானை ராஜேஸ்வரி

சேலம் சுகவனேஷ்வரர் கோவிலில் பராமரிக்கப்படும் யானை ராஜேஸ்வரி நோய்வாய்ப்பட்டு எழுந்து நடமாட முடியாமல் உள்ளது. படுத்தப் படுக்கையாக உள்ளதால் அதனை மருத்துவர்களால் குணப்படுத்த முடியவில்லை. எனவே, யானையை கருணைக்  கொலை செய்வதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்தார்.

மீண்டும் விசாரணை...

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, யானையை கருணைக் கொலை செய்யமுடியுமா? என்பது குறித்து பதிலளிக்கும்படி இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது. விசாரணை திங்கள்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, யானை ராஜேஸ்வரியை கருணை கொலை செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

கருணைக் கொலை...

மேலும் யானையை பரிசோதித்து 48 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி  சேலம் கால்நடை மருத்துவருக்கு உத்தரவிட்டனர்.  மருத்துவ அறிக்கையை பெற்றபின் விதிகளைப் பின்பற்றி யானையைக் கருணைக் கொலை செய்யவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து