முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம மோகன ராவை கைது செய்து விசாரிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவகாரத்தில் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விசாரணை கமிஷனில்...

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில் அண்மையில் ஆஜரான தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ், விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞரின் குறுக்கு விசாரணைக்கு பதிலளித்ததாக கூறினார். அப்போது, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது காவிரி விவகாரம் தொடர்பாக 2 மணி நேரம் ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தார். மேலும் அந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தம்பிதுரை, சி.விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர் என்றார்.

கைது செய்து விசாரிக்க...

ஆனால் இதனை அமைச்சர் தங்கமணி மறுத்தார். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தபோதே ராம மோகன ராவ் அரசியல்வாதியாக செயல்பட்டார் என பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் ராம மோகன ராவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் கூறினார். மாணவிகளை தவறான வழியில் கொண்டு செல்லும் வகையில் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து