பெண்கள் கிரிக்கெட் தரவரிசை: ஸ்மிரிதி மந்தனா 4-வது இடத்திற்கு முன்னேற்றம்

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      விளையாட்டு
Smriti Mandana 2018 04 16

Source: provided

மும்பை : பெண்கள் கிரிக்கெட்டில் இந்த வருடம் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிரிதி மந்தனா 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தொடரை வென்றது...

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கடந்த சில மாதங்களில் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை கைப்பற்றியது. இந்திய அணியில் விளையாடிய ஸ்மிரி மந்தனா 9 போட்டிகளில் 531 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதம், ஐந்து அரைசதங்கள் அடங்கும்.

4-வது இடத்திற்கு...

இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகளில் 181 ரன்கள் அடித்தார். சராசரி 90.5. ஸ்டிரைக் 77.68 ஆகும். இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆல்-ரவுண்டரான தீப்தி ஷர்மா 104 ரன்களுடன், 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி பந்து வீச்சு தரவரிசையில் 14-வது இடத்திற்கும், ஆல்-ரவுண்டர் தரவரிசையில் 3-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார். பேட்டிங் தரவரிசையில் 16-வது இடத்தை பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் மிதலி ராஜ் 7-வது இடத்திலும், ஹர்மன்ப்ரீத் கவுர் 13-வது இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து