முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.வி. செட்அப் பாக்ஸில் சிப்: மத்திய அரசு மக்களை வேவு பார்ப்பதாக காங்கிரஸ் புகார்

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டி.வி. செட் ஆப் பாக்ஸில் சிப் பொருத்துவதன் மூலம் மக்களை வேவு பார்க்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

டி.வி.யில் மக்கள் எந்த நிகழ்ச்சியை அதிக நேரம் காண்கிறார்கள் என்பதை அறிவதற்காக, செட்- டாப் பாக்ஸ் கருவியில் சிப் பொருத்துவது தொடர்பான திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தனியார் ஆய்வு நிறுவனங்கள் மட்டுமே இந்த தகவல்களை திரட்டி வரும் நிலையில் அரசுக்கும் இந்த தகவல்களை திரட்டுவதற்காக இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது. ஆனால் இது மக்களை வேவு பார்க்கும் நடவடிக்கை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மேலும் அரசியல் ரீதியாகவும் இதனை பயன்படுத்திக் கொள்ள பா.ஜ.க முயலக் கூடும் என காங்கிரஸ் கூறியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சிங் சுரஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு அடுத்த வேவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. தனிநபர் உரிமையை மீறி செயல்படுகிறது. தனிநபர் ரகசியங்களை தெரிந்து கொள்ள முயல்வது கண்டனத்துக்குரியது. நான்கு சுவர்களுக்குள் நடப்பதை, படுக்கை அறைக்குள் சென்ற பார்ப்பது அரசின் கடமை அல்ல. எந்த நிகழ்ச்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி விரும்புகிறார். ஆனால் அரசின் நோக்கம் அதுமட்டுமல்ல எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து