முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 தொகுதிகளில் போட்டியிட விரும்பிய சித்தராமையாவின் கோரிக்கை நிராகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

2 தொகுதிகளில் போட்டியிட விரும்பிய சித்தராமையாவின் கோரிக்கை நிராகரிப்பு
பெங்களூரு, கர்நாடக முதல்வர் சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிட விரும்பினார். அவரது கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிராகரித்துள்ளார்.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 218 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. அதில் முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் மட்டுமே போட்டியிடுவார் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பா.ஜ.க மாநில தலைவர் எடியூரப்பாவும், ம.ஜ.த தேசிய தலைவர் தேவகவுடாவும் சித்தராமையா எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோற்கடிப்போம் என சவால் விடுத்தனர். இதனால் சித்தராமையா ஒரு தொகுதிக்கு பதிலாக இரு தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்தார். குறிப்பாக தனது சொந்த மாவட்டமான மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதியிலும், பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாதாமி தொகுதியிலும் போட்டியிட திட்டமிட்டார்.

இதற்காக 3 மாதங்களாக இரு தொகுதிகளிலும் உள்ள கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். கடந்த இரு மாதங்களில் இரு தொகுதிகளிலும் சிறப்பு கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்தார். சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய இரு தொகுதிகளில் தனக்கும், வருணா தொகுதியில் தன் மகன் யதீந்திராவுக்கு சித்தராமையா விருப்ப மனு அளித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடமும் இதுகுறித்து கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி கர்நாடக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய போது மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர் பரமேஷ்வர் ஆகியோர் கடுமையாக எதிர்த்தன‌ர். சித்தராமையாவுக்கு இரு தொகுதிகள் வழங்கினால் தனக்கும் இரு தொகுதிகள் வழங்க வேண்டும் என பரமேஷ்வர் போர்க்கொடி தூக்கியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல் காந்தி, சித்தராமையாவுக்கு சாமூண்டீஸ்வரி தொகுதியை மட்டும் ஒதுக்கினார். இந்த தொகுதியில் சித்தராமையா ஏற்கெனவே 3 முறை வெற்றியும், 2 முறையும் தோல்வியும் அடைந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து