முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி மதுரை கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்.

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

  மதுரை. - மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் நடத்திய மகளிர் சுயஉதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்களின் விற்பனை கண்காட்சியினை (கல்லூரி சந்தை) மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,  துவக்கி வைத்தார்.
  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
  மதுரை மாவட்டத்தில் கடந்த 14.04.2018 முதல் 05.05.2018 வரை கிராம சுயாட்சி இயக்கம் கிராம சுவராஜ் அபியான் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் சிறப்பான ஆணைக்கிணங்க இந்தியா முழுவதும் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  மதுரை மாவட்டத்தில் பல்வேறு துறைகள் இணைந்து இந்த கிராம சுயாட்சி இயக்கத்தில் கிராமங்களில் எவ்வாறு மக்களின் நலனுக்காக பல அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்பதனை எடுத்துரைக்கும் நிகழ்ச்சியே கிராம சுவராஜ் ஆகும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சுகாதாரம், விவசாயதாரர்களுக்கு தேவையான முன்னேற்றங்கள், ளுறயவஉh டீhயசயவா இயக்கம் இதன் மூலமாக பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் நாம் எடுத்து வருகிறோம்.  தமிழக அரசு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான ஆணைப்படி இந்த அனைத்து திட்டங்களும் மதுரை மாவட்டத்தில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.  அதில் ஒரு பங்காக இன்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.  இதுவரை நமது மாவட்டத்தில் 4 கல்லூரி சந்தைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் 5 கல்லூரிகளில் கல்லூரி சந்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதில் இந்த ஆண்டு 5வது இடமாக மங்கையர்க்கரசி மகளிர் கல்லூரி தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
  இந்த கல்லூரி சந்தையின் நோக்கமானது மாணவர்கள் படித்து முடித்த உடன் எதிர்காலத்தில் தொழில் முனைவோர்களாக திகழ்ந்திடவும், பிறருக்கு வேலைவாய்ப்பினை அளிக்கும் வகையில் திகழ இது உதவும்.  ஒவ்வொரு அரங்கிலும் சுயஉதவிக்குழுக்களுடன் மாணவர்களும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த கல்லூரி சந்தையில் இதுவரை 98 குழுக்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பங்கேற்றுள்ளனர்.  இன்று 24 குழுக்கள் வந்துள்ளனர்.  இவர்கள் அனைவரும் தங்களது பொருட்களை கல்லூரியில் விற்பனை செய்ய வந்துள்ளனர்.  இப்பொருட்களை அனைவரும் வாங்கி மகளிர் சுயஉதவிக்குழுக்களின் தொழில் திறனை ஊக்கப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
  இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர்  .க.அருண்மணி, மங்கையர்க்கரசி கல்விக்குழும செயலாளர்  பி.அசோக்குமார், மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து