முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசல் அதிரடியால் கொல்கத்தாவிடம் தோல்வி - டெல்லி கேப்டன் காம்பீர் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : ஆந்த்ரே ரசல் அதிரடியால் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்ததாக டெல்லி அணியின் கேப்டன் கவுதம் காம்பீரி கூறியுள்ளார்.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் கொல்கத்தாவில் நடந்த 13-வது லீக் கொல்கத்தாவிடம் 71 ரன் வித்தியாசத்தில் டெல்லி தோற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 200 ரன் குவித்தது. ஆந்த்ரே ரசல் அதிரடியாக விளையாடி 12 பந்தில் 41 ரன் (6சிக்சர்) எடுத்தார். நிதிஷ் ராணா 59 ரன் எடுத்தார். அடுத்து விளையாடிய டெல்லி 14.2 ஓவரில் 129 ரன்னில் சுருண்டது.
கடினமானது

தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் கவுதம் காம்பீர் கூறியதாவது:-

ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 175 ரன் கூட எடுக்காது என்று நினைத்து இருந்தேன். ஆந்த்ரே ரசலுக்கு எதிராக திட்டம் வைத்து இருந்தோம். ஆனால் ஆந்த்ரே ரசல் நிலைத்து நின்றுவிட்டால் அவருக்கு பந்துவீச்சாளர்களின் செயல் திட்டத்தை அளிப்பது கடினமானது. அவரது அதிரடியால் தோற்றோம். கையில் இருந்த வெற்றியை கொல்கத்தாவிடம் பறி கொடுத்து விட்டோம் என்றார்.

திட்டமிட்டபடி...

கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், நாங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டோம். இதில் ஸ்ரேயஸ் ஐயர் கேட்ச்சை நிதிஷ் ராணா பிடித்தது முக்கியமானது. முடிவில் வெற்றி பெறுவது உங்களை மகிழ்ச்சியாக வைத்து இருக்கும். எங்கள் அணியில் உள்ள மூன்று தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள் என்றார். கொல்கத்தா பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 4-வது ஆட்டத்தில் விளையாடிய டெல்லி 3-வது தோல்வியை சந்தித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து