முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூக்கையூர்- குந்துகால் பகுதியில் மீனவர் நல திட்ட பணிகளை அரசு செயலாளர்கள் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் மற்றும் குந்துகால் பகுதிகளில் நடைபெற்று வரும் மீனவர் நல திட்ட பணிகளை அரசு செயலாளர்கள் ஆய்வு செய்தனர்.
    ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்வளத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மீனவர்நல பணிகள் குறித்து  ஆய்வு செய்வதற்காக   மத்திய அரசு இணைச் செயலர்கள் குழுவைச் சார்ந்த சஞ்சய் பாண்டா, (மத்திய வெளியுறவுத் துறை), பிரஜேந்திரா நவநீத்,(பாரத பிரதமர் அலுவலகம்), ரமேஷ்குமார்,(மத்திய கால்நடை பராமரிப்பு  மற்றும் மீன்வளத்துறை) ஆகியோர் வந்துள்ளனர். இவர்கள் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலர் (கால்நடை பராமரிப்பு  மற்றும் மீன்வளத்துறை) டாக்டர் கே.கோபால், மீன்வளத்துறை இயக்குநர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் ஆகியோருடன் சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூர் பகுதியில் ரூ.114 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீன்பிடித்துறைமுக கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும், தங்கச்சிமடம் அருகேயுள்ள குந்துகால் பகுதியில் ரூ.70 கோடி மதிப்பில் அமைக்கப்;படவுள்ள மீன்பிடி இறங்குதளத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திலும் நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலர் (கால்நடை பராமரிப்பு  மற்றும் மீன்வளத்துறை) டாக்டர் கே.கோபால் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் நலனைப் பாதுகாத்திடும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.  அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூர் கிராமப்பகுதியில் ரூ.113.90 கோடி மதிப்பில் 250 விசைப்படகுகள் மற்றும் 200 நாட்டுப்படகுகள் நிறுத்திட ஏதுவாகவும், மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீன்ஏலக் கூடம், மீன்களை காயவைப்பதற்கான தளம், வலை பின்னும் கூடம், மீனவர்கள் ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன்  மீன்பிடித்துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
     இப்பணிகளின் நிலை குறித்து இன்றைய தினம் கள ஆய்வு செய்யப்பட்டது.  அதனடிப்படையில் தற்போது வரை 67மூ கட்டுமானப் பணிகள்  நிறைவு பெற்றுள்ளது.  மீதமுள்ள பணிகளை துரிதமாக மேற்கொண்டு 2019-ஆம் ஆண்டு  ஜனவரிக்குள் பணிகளை 100மூ நிறைவேற்றிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதேபோல தங்கச்சிமடம் அருகேயுள்ள குந்துகால் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்திடும் வகையில் ரூ.70 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்குதளம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் மூலம் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  மேலும் தற்போது இந்த மீன்பிடி இறங்குதளத்தினை சிறு துறைமுகமாக கட்டமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அலுவலர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.  விரைவில் பணிகள் துவங்கப்பட்டு காலதாமதமின்றி மீனவர்;களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 இதுதவிர ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்திடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த சுமார் 500 மீனவர்களுக்கு அரசு மானியத்துடன் ரூ.80 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான கட்டுமானப் பணிகள், கொச்சியில் உள்ள கப்பல் கட்டுந்துறையில் நடைபெற்று வருகின்றது.   அவற்றில்; முதற்கட்டமாக மீனவர்களுக்கு புதிய ஆழ்கடல் மீன்பிடி படகுகள் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார். அதனைத் தொடர்ந்து, மண்டபத்திலுள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய கூட்டரங்கில் மீனவர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்கள். இந்த ஆய்வுகளின் போது மீன்வளத்துறை ஆணையர் பால்பாண்டியன், கூடுதல் இயக்குநர்கள் மோகனசுந்தரம், அமல் சேவியர், மீன்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் கே.நேரு, செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமார், உதவி செயற்பொறியாளர் ஜி.நாகரத்தினம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, உதவி அலுவலர் கயிலை செல்வம், மீன்வளத்துறை துணை இயக்குநர் ஐசக் ஜெயக்குமார் உள்பட அரசு அலுவலர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து