முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட்கோலி கிரிக்கெட்டின் ரொனால்டோ - பிராவோ புகழாரம்

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.

கிறிஸ்டியானோ...

கால்பந்து போட்டியில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவராக போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனும், ரியல் மாட்ரிட் அணியின் முன்னணி ஸ்டிரைக்கரும் ஆன கிறிஸ்டியானோ ரொனால்டோ கருதப்படுகிறார். விளையாட்டில் எப்படி தனது திறமையை வெளிப்படுத்துகிறாரோ, அதேபோல் தனது உடற்தகுதியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

புகழாரம்...

அதேபோல்தான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருவதுபோல் உடற்தகுதியிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான வெயின் பிராவோ, விராட் கோலி கிரிக்கெட்டின் ரொனால்டோ என்று தெரிவித்துள்ளார். விராட் கோலி குறித்து வெயின் பிராவோ கூறுகையில் ‘‘விராட் கோலியை கிறிஸ்டியானோ ரொனால்டோவுன் ஒப்பிடுவது சிறந்தது. விராட் கோலி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் எனது இளைய சகோதரரான டேரன் பிராவோ உடன் விளையாடியுள்ளார். விராட் கோலியிடம் என்னுடைய சசோதரர் பேட்டிங் மற்றும் கிரிக்கெட் பற்றி பேசுங்கள் என்ற கேட்டுக்கொண்டேன்.

பாராட்டுகிறேன்

நான் விராட் கோலியை பார்க்கும்போது, கிரிக்கெட்டில் ரொனால்டோவை பார்க்கிறேன். ஒரு கிரிக்கெட்டராக விராட் கோலி இந்திய அணிக்காகவும், ஆர்சிபிக்காவும விளையாடும்போது அவரது ஆட்டத்தை பார்த்துள்ளேன். அவரது திறமையை நான் கட்டாயம் பாராட்டுகிறேன். அவர் ஈடுபாட்டுடன் விளையாடும் கிரிக்கெட்டை வைத்து பார்க்கும்போது அனைத்து சாதனைகளுக்கும் தகுதியானவர்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து