ஜி.எஸ்.டி வரி வசூல் மேலும் அதிகரிக்கும்

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      வர்த்தகம்
gst 2017 06 02

ஜிஎஸ்டி வரி வசூல் 95,000 கோடியாக அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தொடர்ச்சியான சரிவுக்கு பின்னர் மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்க உள்ளது. ஏப்ரல் 20-ம் தேதிக்குள் இதற்கான வரித்தாக்கல் செய்யப்பட வேண்டும். கடந்த ஐந்து மாதங்களில் சராசரியாக ஜிஎஸ்டி வசூல் ரூ.87,000 கோடியாக உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப் படுத்தியதிலிருந்தே மொத்த ஜிஎஸ்டி வசூல் ஏற்ற இறக்கமாகவே உள்ளது. அறிமுகப்படுத்திய பின்னர் மூன்று மாதங்களில் ரூ.90,000 கோடி வரை வசூலானது. தற்போது கடந்த இரண்டு மாதங்களாக சரிவடைந்துள்ளது. முன்பைவிட ஜிஎஸ்டி விஷயத்தில் தெளிவு ஏற்பட்டுள்ளது. ஆரம்ப மாதங்களைத் தாண்டி இப்போது இந்திய பொருளாதாரம் ஜிஎஸ்டிக்கு தயாராகிவிட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து