ஆர்.பி.ஐ. கவர்னர் உர்ஜித் படேலுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அழைப்பு

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      வர்த்தகம்
parliament 2018 3 6

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்பமொய்லி தலைமையிலான நிதி நிலைக்குழுவினர், வங்கித் துறையில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மோசடிகள் குறித்து நிதிச்சேவை செயலாளர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தினர். வங்கி மோசடி தொடர்பாக பல்வேறு கேள்விகளை அவர்கள் எழுப்பினார்கள்.

இந்த குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர். விசாரணையில் மன்மோகன் சிங் பங்கேற்றிருந்தார். இந்த குழு மே 17-ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து