முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட் இருந்தது: திரிபுரா முதல்வர் பேச்சு

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

அகர்தலா, இணையதளம் என்பது புதிய கண்டுபிடிப்பு அல்ல, மகாபாரத காலத்திலேயே இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் இருந்துள்ளது என திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் தேப் குமார் கூறியுள்ளார்.
அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் குமார் பேசியதாவது,

பிரதமர் நரேந்திர மோடி, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் அனைவருக்கும் இணையதள சேவையை சென்றடைய நடவடிக்கை எடுத்து வருகிறார். மத்திய அரசின் இந்த திட்டங்களால் இணையதள சேவையை பெறுவதில் இந்தியா வேகம் காட்டி வருகிறது. மகாபாரத போர் நடைபெற்றபோது, கண் பார்வையற்ற திருதிராஷ்டிரன் போர்க்களத்தின் அருகே இல்லாமல், அரண்மனையில் இருந்தபடியே தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொண்டார். இணையதளம் மற்றும் செயற்கைகோள் தொழில் நுட்பம் மூலமே இது சாத்தியமாயிற்று. இதன் மூலம் அந்த காலத்திலேயே இத்தகைய தொழில்நுட்பம் இருந்துள்ளது நமக்கு தெரிகிறது.

இந்த நவீன தொழில்நுட்பத்திற்கு  ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் உரிமை கோரலாம். ஆனால் உண்மையில், இவை அனைத்தும் இந்தியாவின் தொழில்நுட்பம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இணையதளம் மற்றும் செயற்கைகோள்கள் இருந்துள்ளன. இணையதளம் மற்றும் கணினி தொழில்நுட்பத்தில் இன்று கூட, உலகில் நாம்தான் முன்னோடியாக இருக்கிறோம். மைக்ரோசாப்ட் அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும், அதன் பெரும்பாலான பொறியாளர்கள் இந்தியர்களே. நவீன இணையதள துறையில் உலகம் முழுவதும் இந்தியர்கள் கோலோச்சுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து