முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம்: கவர்னர் பன்வாரிலால் மன்னிப்பு கோரினார் இ-மெயில் மூலம் வருத்தத்தை தெரிவித்தார்

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மன்னிப்பு கோரியுள்ளார். கவர்னரின் மன்னிப்பை அந்த பெண் நிருபர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

பேராசிரியை நிர்மலா தேவி கைது, காவிரி மேலாண்மை வாரியம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக  நேற்று முன்தினம் மாலை கவர்னர் பன்வாரிலால் புரோகித்  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது பேசிய கவர்னர், நிர்மலா தேவியின் முகத்தைக்கூட இதுவரைப் பார்த்தது இல்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் அபத்தமானவை என்று விளக்கமளித்தார்.

நிருபர் ஆதங்கம்...

இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பு நிறைவடையும் சமயத்தில், 'தி வீக்' இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் பன்வாரிலால் புரோகித்திடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு பதில் சொல்லாமல் அவரது கன்னத்தை அவர் தட்டிக்கொடுத்தார். இது குறித்து அந்த பெண் செய்தியாளர் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், கவர்னரின் செய்தியாளர் சந்திப்பு நிறைவடையும் போது, நான் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன். அந்தக் கேள்விக்குப் பதிலாக, எனது அனுமதியின்றியே அவர் கன்னத்தில் தட்டினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதிலிருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை. கோபமும் ஆதங்கமும் எனக்கு ஏற்பட்டது. கவர்னர் அவர்களே... தாத்தா என்கிற முறையில் எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் முறையில் நீங்கள் இதைச் செய்திருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை நீங்கள் செய்தது தவறு என்று ட்விட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

பாரட்டும் விதமாக...

இந்த நிலையில் பெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம்  கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார். கேள்வியை பாராட்டும்விதமாகவே எனது பேத்திபோல் நினைத்து கன்னத்தில் தட்டினேன். 40 ஆண்டுகளாக  செய்தியாளராக இருந்துள்ளதால் அந்த கேள்வியை பாரட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என கூறி  உள்ளார். இது குறித்த கடிதம் இ-மெயில் மூலம் பெண் பத்திரிகையாளருக்கும் அனுப்பபட்டு உள்ளது.

ஏற்றுக்கொண்டார்

இந்நிலையில் கவர்னர் மன்னிப்பு தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொண்டுள்ள பெண் பத்திரிகையாளர், ஆனால் அதற்கான காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:- மாண்புமிகு கவர்னருக்கு, உங்களது மன்னிப்பினை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதே சமயம் நான் கேட்ட கேள்விக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக நீங்கள் நடந்து கொண்டதாக கூறுவது சரி இல்லை. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து