முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனவுகள் மெய்ப்பட குழந்தைகளோடு அதிகநேரம் செலவிடுகள பள்ளி ஆண்டுவிழாவில ஆனந்தகுமார், ஜ.ஏ.எஸ். பேச்சு.

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு - பர்ஸ்ட் ஸ்டெப் பள்ளி ஆண்டுவிழாவில் பாரதியார் பாட்டுப்பாடி அரசு கூடுதல் நிதிச்செயலாளர் டாக்டர்.ஆனந்தக்குமார், ஐ.ஏ.எஸ் பேச்சு
வத்தலக்குண்டு திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பர்ஸ்ட் ஸ்டெப் பள்ளியின் ஐந்தாம் ஆண்டுவிழா கணவாய்ப்பட்டி சி.பி.எஸ்.சி, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    இவ்விழாவிற்கு தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் செயலாளர் டாக்டர். ஆனந்தகுமார், ஜ.ஏ.எஸ். தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.  பர்ஸ்ட் ஸ்டெப் பள்ளியின் தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். தாளாளர் கயல்விழி வரவேற்புரை நிகழ்த்தினார். பிரான்ஸ் நாட்டு கல்வியாளர் மற்றும் சமூகசேவகி செல்வி லூசி கல்லாய்டு மற்றும் இந்திய ஆண்கள் கபடி அணி மற்றும் தமிழ்தலைவாஸ் கபடி அணிப் பயிற்சியாளர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
 தலைமை விருந்தினர் ஆனந்தகுமார் தனது தலைமை உரையில் பள்ளியில் படிப்பு மட்டுமல்லாது விளையாட்டுஇ நாடகம்இ பேச்சுப்போட்டி  பாட்டு போட்டி மற்றும் அனைத்துவிதமான கலை இலக்கிய போட்டிகளில் கலந்து  கொள்ள ஊக்கப்படுத்துங்கள். அப்பொழுதுதான் அவர்கள் எதில் திரமையாக இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியம் மேலும் மாணவர்கள்     வெற்றிபெரும் போது கர்வம் கொள்ளாமல் இருக்கவும் தோல்வி ஏற்படும் போது துவண்டுவிடாமல் இருக்கவும் கற்றுக்கொடுங்கள் என்று கூறினார். பிறகு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் போன்ற உயர் படிப்பு படிக்க என்ன செய்யவேண்டும்? குழந்தைகளின் கனவுகளை எப்படி நிறைவேற்றுவது போன்ற கேள்விகளைக் கேட்டனர். பெற்றோர்களின் கேள்விகளுக்கு அவர் அதிகாலையில் எழும் பழக்கத்தை கடைப்பிடித்து பள்ளிக்கு அனுப்புங்கள் மாலை முதல் இரவுவரை குழந்தைகளோடு அதிகநேரம் செலவிடுங்கள் எனக் கூறியதுடன். “நிற்பதுவே,நடப்பதுவே  பறப்பதுவே என்ற மகாகவி பாரதியார் பாடலைப் பாடி பெற்றோர்கள்  கேட்ட கேள்விகளுக்கு சொப்பனங்கள் சாத்தியம்தான்”எனற பாடல் மூலம் பதி;ல்களை அழுத்தமாக எடுத்துரைத்தார்.
 இவ்விழாவில் பிரான்ஸ் கல்வியாளர் மற்றும் சமூகசேவகி லூசிகல்லாய்டு  மாணவமாணவிகளுக்கு பிரஞ்சுமொழிப் பாடலை பாடவைத்ததுடன் தானும் தமிழின் சிறப்பைப் போற்றும் “எங்கள் தமிழே,எங்கள் இனமே மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன் பிறந்ததமிழே”என்றபாட்டை தமிழில் பாடி அனைவரையும் கவர்ந்தார்.
  ரியாஅருண் அவர்கள் கடந்த 2017-2018 ஆண்டுபள்ளியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை காணோளிக்காட்சி மூலம் விளக்கினார். பல்வேறு பிரிவுகளில் சிறந்துவிளங்கிய மாணவமாணவிகளுக்கும் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக விடுமுறையே எடுக்காமல் தொடர்ந்து பள்ளிக்குவந்த 22 மாணவ,மாணவிகள் உட்பட 250க்கும் மேற்பட்ட மாணவமாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. எல்.இ.டி டிவியுடன் ஒளி ஒலியுடன் அமைக்கப்பட்ட கண்கவர் வண்ணமயமான மேடையில் மாணவமாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை பசுவப்ரியாஇ தங்ககதிரவன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் ஓட்டுநர், நடத்துநர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 2000 க்கும் மேற்பட்ட பெற்றோர்களும் அவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர். ஆசிரியர் நித்யா வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து