முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அவ்வப்போது மழை

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் சுட்டெரித்தாலும் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. லட்சத் தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது.

வெப்பசலனத்தால்...

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து