முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை முதல்வர் ஓ.பி.எஸ் டெல்லி சென்றார் - நிதிக்குழு தலைவர் கே.பி.சிங்கை இன்று சந்திக்கிறார்

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : 15-வது நிதிக் குழுவில் தமிழகத்துக்கு பாதகமான அம்சங்களை நீக்கக்கோரி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.  இதுதொடர்பாக நிதிக்குழு தலைவர் கே.பி.சிங்கை இன்று சந்தித்து பேசுகிறார்.

புதுடெல்லி பயணம்

தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு வழங்குவதில் பதினைந்தாவது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் பாதகமாக அம்சங்களை எடுத்துரைப்பது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை 5.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் புது டெல்லி புறப்பட்டார். அவர் இன்று புதுடெல்லியில் நிதிக்குழுவின் தலைவர் கே.என்.சிங்கை சந்தித்து பேசுகிறார்.

முதல்வர் தலைமையில்...

இது குறித்து ஏற்கனவே கடந்த 10 ம்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 15 வது நிதிக்குழுவின் பரிந்துரையில் இடம்பெற்றுள்ள தமிழகத்திற்கு பாதகமான அம்சங்களைத் திருத்த மத்திய அரசிடம் வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்கள் கடந்த 40 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுத்திய காரணத்தினால், 15-வது நிதிக்குழுவின் ஆய்வு வரம்புகளில் 1971-ம் ஆண்டைய மக்கள் தொகைக்குப் பதிலாக, 2011-ம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பினைக் கருத்தில் கொள்ள வேண்டுமென்ற முடிவு தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது.

பிரதமருக்கு கடிதம்...

இது குறித்து ஏற்கெனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கும், மத்திய நிதி அமைச்சருக்கும், நிதி ஆணையத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழக எம்.பி.க்கள் 15-வது நிதி ஆணையத்தினை நேரில் சந்தித்து, 15-வது நிதிக்குழுவின் ஆய்வு வரம்பிலுள்ள தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்களை சுட்டிக்காட்டி அதனை திருத்திட கோரிக்கை மனுவினை அளித்து, நிதி ஆணையத்திடம் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது,

எடுத்துரைக்க முடிவு...

மேலும், இதுகுறித்து பாராளுமன்ற விவாதத்தின் போது தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இது தவிர, மத்திய நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு இது குறித்து விவாதிக்க வரும்போது, தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை மிக உறுதியாக எடுத்துரைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

நேரில் வலியுறுத்தல்...

இந்நிலையில், புதுடெல்லியில் நிதிக்குழு தலைவர் கே.பி.சிங்கை இன்று நேரில் சந்தித்து 15-வது நிதிக் குழுவில் தமிழகத்துக்கு பாதகமான அம்சங்களை நீக்கக்கோரி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்துகிறார். குறிப்பாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டால், அது மாநில நலனைப் பெரிதும் பாதிக்கும் என்பதை மத்திய நிதி ஆணையத்திடம் எடுத்துரைப்பது என அப்போது தீர்மானிக்கப்பட்டதின்படி, மத்திய நிதி ஆணைய உறுப்பினர்களை நேரில் சந்தித்து தமிழக அரசின் கருத்தை வலியுறுத்துவதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து