முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: ஹெச்.ராஜாவை கண்டித்து சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கொடும்பாவி எரித்து போராட்டம்...

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

ஹெச்.ராஜாவை கண்டித்து சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கொடும்பாவி எரித்து போராட்டம்... ஹெச்.ராஜாவை கண்டித்து சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கொடும்பாவி எரித்து போராட்டம்... திமுக தலைவரை பற்றி மறைமுகமாக பேசிய ஹெச். ராஜாவை உடனடியாக கைது செய்திட திமுக இளைஞர் அணியினர் வலியுறுத்தல்... திமுக தலைவர் பற்றி மறைமுகமாக சமூக வலைதலத்தில் தவறாக எழுதிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்- ராஜாவை கண்டித்து சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் சேலம் மாநகரின் பல்வேறு கொடும்பாவி எரிக்கப்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு சேலம் மாநகர திமுக செயலாளர் ஜெயகுமார் தலைமையில் திமுகவினர் ராஜாவின் கொடும்பாவியை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திமுகவை பற்றியும் திமுக தலைவர் பற்றியும் தொடர்ந்து அவதுறாக பேசி வரும் ராஜாவை கைது செய்திட வேண்டும் என்று வலியுறுத்தபட்டது. இதேபோல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு சேலம் மாநகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கேபிள் சரவணன் தலைமையில் ஓன்று திரண்ட திமுக இளைஞர் அணியினர்இ ராஜாவின் உருவ மொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடுஇ ராஜாவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் தமிழகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் ராஜாவை நாடு கடத்திட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதே போன்று சேலம் அஸ்த்தம்பட்டிஇ ஐந்து ரோடுஇ தாதாகபட்டிஇ ஓமலூர்இ அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து