முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் குவித்து விராட்கோலி முதலிடம் - ரெய்னாவை பின்னுக்குத்தள்ளினார்

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து முதலிடத்தில் இருந்த சுரேஷ் ரெய்னாவை விராட் கோலி முந்தினார்.

முதல் வெற்றி...

11-வது ஐ.பி.எல். தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி பெங்களூரை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 52 பந்தில் 94 ரன்னிலும் (10 பவுன்டரி), 5 சிக்சர்) லீவிஸ் 42 பந்தில் 65 ரன்னும் (6 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். உமேஷ் யாதவ், ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டும், வோக்ஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

கோலி அதிரடி...

பின்னர் விளையாடிய பெங்களூர் அணியால் 20 ஓவர் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணி 46 ரன்னில் வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி ஒருவரே அபாரமாக ஆடினார். அவர் 62 பந்தில் 92 ரன் (7 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அந்த அணி தொடர்ச்சியாக சென்னை, ஐதராபாத், டெல்லியிடம் தோற்றது. தற்போது பெங்களூரை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. மும்பை அணி 5-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 22-ந்தேதி சந்திக்கிறது.

4619 ரன் குவிப்பு...

பெங்களூர் அணி 3-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 5-வது ஆட்டத்தில் டெல்லியை 21-ம் தேதி எதிர்கொள்கிறது. 30 ரன்னை எடுத்த போது விராட் கோலி ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் எடுத்து இருந்த ரெய்னாவை முந்தினார். விராட் கோலி 145 இன்னிங்சில் 4619 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதில் 4 சதம், 32 அரை சதமும் அடங்கும். 401 பவுண்டரிகளும், 166 சிக்சர்களும் அடித்துள்ளார். அவரது சராசரி 38.17. ஸ்டிரைக்ரேட் 130.33 ஆகும்.

ரெய்னா 2-வது ...

ரெய்னா 159 இன்னிங்சில் 4558 ரன்னுடன் 2-வது இடத்தில் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான அவர் காயம் காரணமாக கடந்த போட்டியில் ஆடவில்லை. 20-ந்தேதி நடைபெறும் போட்டியிலும் அவர் ஆடமாட்டார். இதனால் விராட் கோலி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிப்பார். இருவரது ஆட்டத்திறனை பொறுத்து யார் முதலில் இருப்பார் என்பது இந்த சீசன் முடிவில் தெரியும். அதே நேரத்தில் மும்பை கேப்டன் ரோகித்தும் நெருங்கி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து