முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா மீது விரைவில் பொருளாதார தடை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: ரஷ்யா மீது விரைவில் பொருளாதாரத் தடை விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத் தடை
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் கூறும்போது, "அமெரிக்காவில் இயங்கும் முக்கிய ஊடகங்கள் ரஷ்யாவுக்கு எதிரான எனது நடவடிக்களை கவனிக்க தவறிவிட்டன. ஆனால் என்னைவிட ரஷ்யாவுடன் கடுமையான நடந்து கொண்டவர்கள் யாரும் கிடையாது என்று அந்த நாடு விரைவில் கூறும். நாம் விரைவில் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்க இருக்கிறோம். அதற்கு அவர்கள் தகுதியானவர்கள்தான்" என்று கூறினார்.

அதிபர் தேர்தலில்...
கடந்த 2016 ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர்.தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில் ஹிலாரியின் சர்ச்சைக்குரிய 6.5 லட்சம் இ-மெயில்கள் இணையத்தில் வெளியாகின. மேலும் ஹிலாரியின் உடல்நலம் குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவின.  இவற்றின் பின்னணியில் ரஷ்ய ஆதரவு அமைப்புகள் செயல்பட்டதாகவும் அவை ட்ரம்புக்கு உதவியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து