முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

விஜயவாடா: ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் உண்ணாவிரதப் பேராட்டம் நடைபெற்றது.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வில் தொடர்ந்து தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் சந்திரபாபு நாயுடு உட்பட, ஆந்திர அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் என அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமராவதியில் தனது கட்சியினருடன் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தெலுங்குதேச கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து