முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.700 கோடி

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.கே. சிவக்குமாருக்கு ரூ.700 கோடி சொத்துக்கள் இருப்பதாகத் பிராமணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் மே 12-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 15-ம் தேதியும் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில், காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் பிராந்திய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் ராமநகரா மாவட்டத்தில், கனகபுரா தொகுதியில் தற்போதைய எரிசக்திதுறை அமைச்சர் சிவக்குமார் போட்டியிடுகிறார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவரின் வருமானம், சொத்து, மனைவியின் சொத்து மதிப்பு ரூ.730 கோடி எனத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தனது வேட்பு மனுத்தாக்கல் பிரமாணப் பத்திரத்தில் தன்னிடம் ரூ.34 லட்சம் ரொக்கப்பணம் வங்கியில் டெபாசிட்டாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பெங்களூரு, சிகாரிபுராவில் ரூ.3.38 கோடி மதிப்புள்ள இரு வீடுகள், ரூ.54 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலம், ரூ.ஒரு கோடி மதிப்புள்ள 2.9 கிலோ மற்றும் 84.80 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து