முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்க வேண்டும் 67 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு வெங்கையா நாயுடுவிடம் மனு

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் 7 எதிர்க்கட்சித் தலைவர்கள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து மனு அளித்துள்ளனர். தீபக் மிஸ்ராவிற்கு எதிராக 67 எம்.பி.க்கள் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் எதிர்க்கட்சியினர் துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடுவை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தனர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்கான இம்பீச்மென்ட் மனுவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 67 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு வெங்கையா நாயுடுவிடம் அளித்தனர்.

சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு  உத்தரவிட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த இம்பீச்மென்ட் மனுவை வெங்கய்ய நாயுடுவிடம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சோராபுதீன் ஷா என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா, கடந்த டிசம்பர் 2014- ல் நாக்பூரில் திடீர் மாரடைப்பால் லோயா மரணமடைந்த நிலையில், வேறு நீதிபதி நியமிக்கப்பட்டு அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அமித்ஷா விடுவிக்கப்பட்டார்.

இந்திய நீதித்துறை வரலாற்றில் இது ஒரு சோகமான நாள் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டியுள்ளதாகவும் லோயா மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரியதற்கு அமித்ஷா மீதான காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று பாஜக கூறி இருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரும் விவகாரம் தொடர்பாக குலாம் நபி ஆசாத் நேற்று காலையில் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் குலாம் நபி ஆசாத் தலைமையிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு வெங்கய்ய நாயுடுவை சந்தித்து மனுவை அளித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய வாத காங்கிரஸ் , ராஷ்ட்ரிய ஜனதா தளம்,  காங்கிரஸ் எம் பி க்கள், இம்பீச்மென்ட் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளன. சுமார் 67 எம்.பி.கள் தீபக் மிஸ்ராவிற்கு எதிரான மனுவில் கையெழுத்திட்டுள்ளன.

திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இம்பீச்மென்ட் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை பதவி நீக்க 50 எம்.பிகளின் கையெழுத்து கிடைத்தாலே போதுமானது, பாராளுமன்ற கூட்டத் தொடர் நடக்கா விட்டாலும் இந்த இம்பீச்மென்ட் தீர்மானம் மீது ராஜ்யசபா தலைவர் இறுதி முடிவெடுக்கலாம். எனவே எதிர்க்கட்சிகள் அளித்துள்ள இம்பீச்மென்ட் தீர்மானத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் ராஜ்யசபா தலைவர் என்பதே அடுத்தகட்ட பரபரப்பாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து