முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாவூத் சொத்துகளை பறிமுதல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: தாவூத்துக்கு சொந்தமாக உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 260 பேர் உயிரிழந்தனர். எழுநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு சதித் திட்டம் தீட்டிய தாவூத் இப்ராஹிம், இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். தற்போது அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில் மும்பையில் தாவூத்துக்கு சொந்தமாக உள்ள சொத்துகளை மத்திய அரசு முடக்கி வைத்தது. இதனை எதிர்த்து அவனது உறவினர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஆர்கே அகர்வால், தாவூத்துக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். அத்துடன் வழக்கையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து