முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடல் சீற்ற அபாய எச்சரிக்கை எதிரொலி ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் அறிவுரை

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்-கடல் சீற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கலெக்டர் நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
     தென்தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:- தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றத்தின் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் இன்று(21-ந் தேதி) காலை 8.30 மணியிலிருந்து நாளை(22-ந் தேதி)  இரவு 11.30 மணி வரையில் 18 முதல் 22 விநாடிகள் இடைவெளியில் கடல் அலைகள் 2.5மீட்டர் முதல் 3.5 மீட்டர் ( அதாவது 8.25 அடி  முதல் 11.50 அடி) உயரத்திற்கு எழுந்து சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
 ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளான ராமேசுவரம் தாலுகா அரிச்சல் முனை, தனுஷ்கோடி மற்றும் அக்னி தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடலில் இறங்கி நீராடுவதை தவிர்க்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரியமான் பகுதிகளில் பொது மக்கள் கடலில் இறங்கி விளையாடுவது மற்றும் நீர்சறுக்கு விளையாட்டுகள் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் கடல் சீற்றத்தின் தாக்கம் கடற்கரை பகுதிகளில் பெரிதும் உணரப்படும். எனவே கடற்கரை ஒட்டிய பகுதிகளில் படகுகள் செல்ல வேண்டாம் எனவும், படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு சேதமடைவதை தவிர்க்கும் பொருட்டு படகுகளை போதிய இடைவெளியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்க வேண்டும். கடற்கரை பகுதிகளில், பொது மக்கள் எவரும் பொழுதுபோக்கு விளையாட்டுகளிலும், வேடிக்கை பார்க்கும் நோக்கிலும் ஈடுபட வேண்டாம். கடற்கரையிலிருந்து கடலுக்குள் படகுகள் எதற்காகவும் செல்ல கூடாது. கடலிலிருந்து கடற்கரைக்கு படகுகளை கொண்டு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
 இதுதவிர மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினரும், அவசர கால வாகனங்களில் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.  கடலோர பகுதிகளில் உள்ள பல்நோக்கு புயல்காப்பக மையங்களை தயார் நிலையில் வைத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடல்சீற்றம் பாதிப்பு மற்றும் மீட்பு உதவி குறித்த தகவல்களை 1077 என்ற கட்டணமில்லா அவசரகால தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி அலுவலர் கயிலைசெல்வம் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
.......................

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து