முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார் அர்சேன் வெங்கர்

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று அர்செனல் எஃப்சி. இந்த அணியின் பயிற்சியாளராக அர்சேன் வெங்கர் பணியாற்றி வருகிறார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 68 வயதாகும் அர்சேன் வெங்கர் கடந்த 1996-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அர்செனல் அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்றுக் கொண்டார். இவரது தலைமையில் அர்செனல் 21 சீசனில் விளையாடி மூன்று முறை பிரீமியர் லீக் டைட்டிலை வாங்கியுள்ளது. அத்துடன் 7 முறை எஃப்ஏ கோப்பையையும், 7 முறை கம்முனிட்டி ஷில்டையும் கைப்பற்றியுள்ளது. 20 வருடமாக தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் விளையாடியுள்ளது. 704 வெற்றிகளை பெற்றுள்ளது.

கடந்த சீசனில் அர்செனல் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அர்சேன் வெங்கர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் ரசிகர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால், அர்செனல் கிளப் அவரது பதவிக்காலத்தை நீட்டித்தது. இந்த சீசனிலும் அர்செனல் மோசமாக விளையாடி வருகிறது. இதனால் வெங்கருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வெங்கர் இந்த சீசனோடு அர்செனல் பயிற்சியளார் பதவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதனால் அர்செனலின் 22 வருடகால பயிற்சியாளர் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து