முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓடு பாதையிலிருந்து விலகி தரையில் மோதி நின்ற விமானம் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

காத்மண்டு: நேபாளத்தில் 139 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம், ஓடுபாதையிலிருந்து விலகி புல்தரையில் மோதி நின்றது. இந்த விபத்தில், விமானத்திலிருந்த அனைவரும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலுள்ள திரிபுவன் விமான நிலையத்திலிருந்து, மலேசியாவைச் சேர்ந்த மலிந்தோ ஏர் ஜெட் விமானம் கடந்த வியாழக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி சுமார் 10 மணிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 4 விமானப் பணியாளர்களும், 135 பயணிகளும் இருந்தனர். விமானம் புறப்பட்ட சில நொடிகளில், விமானிகள் அறையில் இருந்த திரை மூலம் சில கோளாறுகளைக் கண்டறிந்த விமானி, உடனடியாக விமானத்தைப் பறக்கச் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டார்.

எனினும், விமானத்தின் வேகம் காரணமாக உடனடியாக அதனை நிறுத்த முடியவில்லை எனவும், அதன் காரணமாக அந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகி, தெற்கு திசையில் 50 மீட்டர் தொலைவு வரை சறுக்கி சென்றதாகவும் திரிபுவன் சர்வதேச விமான நிலைய பொது மேலாளர் ராஜ் குமார் சேத்ரி தெரிவித்தார்.

இந்த விபத்தில் யாரும் காயமடைந்ததாக தகவல்கள் இல்லை. விமானமும் சேதமடையவில்லை. எனினும், விமானத்தின் முன்பக்கச் சக்கரங்கள் சேற்றுக்குள் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானம் சென்ற ஓடுபாதை உடனடியாக மூடப்பட்டது. பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, அந்த விமானம் புல்தரையிலிருந்து இழுத்து வரப்பட்டு, விமானம் நிறுத்தும் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டதாக ராஜ் குமார் சேத்ரி தெரிவித்தார். விபத்தில் ஓடுபாதைக்கும் சேதங்கள் எதுவும் ஏற்படாததால், அந்தப் பாதையை மற்ற விமானங்கள் பயன்படுத்தத் தொடங்கின என்று அவர் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து