முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட - தென் கொரிய அதிபர்களுக்கிடையே நேரடி தொலைபேசி இணைப்பு வசதி

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

கியாங்: வட கொரிய மற்றும் தென் கொரிய நாடுகளின் அதிபர்களுக்கு இடையிலான நேரடித் தொலைபேசி இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வட கொரிய அதிபர் மாளிகை அதிகாரி யூன் குன்-யங் கூறியதாவது:
வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகிய இருவரும் உரையாடுவதற்கு வசதியாக, இருவருக்கும் இடையே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நேரடி தொலைபேசி இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு வழியாக 4 நிமிடங்கள் 19 விநாடிகளுக்கு சோதனை முறையில் உரையாடல் நிகழ்த்தப்பட்டது என்றார்.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வந்ததால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வந்தது. அமெரிக்காவும் வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இந்த நிலையில், தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வட - தென் கொரியா நாடுகள் இடையே பிணக்கம் குறைந்த சூழலில், வட கொரியாவுக்கு வந்த தென் கொரிய நல்லெண்ணத் தூதுக் குழுவிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கூடிய விரைவில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவதாக கிம் ஜோங்-உன் கூறியிருந்தார்.

டிரம்ப் - கிம் ஜோங் சந்திப்பு நடைபெறலாம் என்பதை அமெரிக்காவும் ஒப்புக் கொண்டது.
இந்த நிலையில், நீண்ட காலத்துக்குப் பிறகு வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகிய இருவரும் பங்கேற்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொரிய மாநாடு, வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், இரு தலைவர்களுக்கும் இடையே நேரடி தொலைத் தொடர்பு வசதி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து