முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட்டியை காதலித்து மணந்த 19 வயது அமெரிக்க இளைஞர்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்காவில் காதலுக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 19 வயது இளைஞர் ஒருவர், 72 வயது மூதாட்டியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

அமெரிக்காவின் டென்னிசி பகுதியை சேர்ந்தவர் அல்மேடா என்ற 72 வயது மூதாட்டி. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் இவர், சமீபத்தில் நடந்த பிறந்தநாள் விழா ஒன்றில் கேரி ஹார்ட்விக் என்ற 19 வயது இளைஞரைச் சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலானது. அதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருந்ததால், இரு வீட்டாரும் இவர்களது திருமணத்திற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரித்தனர்.

அல்மேடாவுக்கு 6 பேரன் மற்றும் பேத்திகள் உள்ளனர். எனவே, இந்த உறவை ஏற்க முடியாமல் அவரது குடும்பத்தினர் ஆரம்பத்தில் தவித்தனர். ஆனாலும் தங்கள் காதலில் உறுதியாக இருந்த அல்மேடாவும், கேரியும் இருவீட்டாரையும் சமாதானம் செய்தனர். அதன் தொடர்ச்சியாக இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது இந்தத் தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அல்மேடாவின் பேரன் ஆரோனுக்கு 22 வயதாகிறது. தனது புதிய தாத்தா கேரியை விட இவர் மூன்று வயது மூத்தவர். எனவே, தாத்தாவுடன் நண்பரைப் போல் பழக முடிகிறது என்கிறார் ஆரோன். மேலும் தங்கள் காதல் பொழுதுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வண்ணமாக, தங்கள் பெயரில் யூ.டியூப் சானலும், பேஸ்புக் பக்கம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளனர் இந்த புதுமணத் தம்பதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து