முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பிரச்சினைகளை வெளிநாடுகளில் பேசுகிறார் மோடி தலைநகரை லண்டன் அல்லது டோக்கியோவுக்கு மாற்றி விடுங்கள்: சிவசேனா கிண்டல் கட்டுரை

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை: நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினைகள் அனைத்தையும் பிரதமர் மோடி தனது வெளிநாட்டு பயணத்தின் போதுதான் பேசுகிறார், ஆதலால், நாட்டின் தலைநகரை லண்டன் அல்லது டோக்கியோவுக்கு மாற்றிவிடுங்கள் என்று சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும், உள்நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அவர் பேசாமல் மவுனமாக இருப்பது குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.  அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு 5 நாட்கள் பயணம் சென்றார். காஷ்மீர் சிறுமி பலாத்காரம், உன்னாவ் மாவட்டத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ.வால் மைனர் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட போன்ற பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன.ஆனால், இதைப்பற்றி உள்நாட்டில் கருத்து தெரிவிக்காமல் பிரதமர் மோடி வெளிநாடுகளில் சென்று கருத்து தெரிவித்து வருகிறார். வேண்டுமென்றால், மோடிக்காக தலைநகரை டோக்கியோ அல்லது லண்டன் நகருக்கோ, பாரீஸ் நகருக்கோ, நியூயார்க், அல்லது ஜெர்மனுக்கோ மாற்றி விடலாம். அது சாத்தியமில்லாவிட்டால் கூட அவரின் அலுவலகத்தைக்கூட மாற்றிவிடலாம்.

அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்தில் இருந்து வரும் போது பிரதமர் மோடி வெறும் கைகளோடு திரும்பி வந்து இருக்கிறார். ரூ.9 ஆயிரம் கோடி வங்கிப் பணத்தை மோசடி செய்த விஜய் மல்லையா, வங்கிப் பணத்தை மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி ஆகியோர் லண்டனில்தான் இருக்கிறார்கள். அவர்களைப் பாதுகாப்பாக தங்க வைத்து விட்டு, அவர்கள் இருவரையும் நாடு கடத்தும் திட்டம் குறித்தும் எந்த முடிவும் எடுக்காமல் வெறும் கையோடு மோடி வந்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் பலாத்கார சம்பவங்களை வெளிநாடுகளில் பிரதமர் மோடி பேசுவது சரியானதா?. இந்தியாவுக்கு அவப்பெயரைத் பெற்றுத்தரும் சம்பவங்களை ஏன் மோடி வெளிநாடுகளில் பேசுகிறார், உள்நாட்டில் அவரின் கருத்துக்களை தெரிவிக்கலாமே. இதே போன்றுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உள்நாட்டில் அறிவித்து விட்டு, பிரதமர்மோடி ஜப்பானுக்குப் பறந்து விட்டார். அங்கிருக்கும் இந்தியர்களிடம் கறுப்புபணம், ஊழல் குறித்து பேசினார். ஆனால், இது குறித்துப் பேச மோடியின் ஆதரவாளர்கள் முன்வர மாட்டார்கள். மோடி மவுனமாகி விட்டார். பா.ஜ.க.வுக்கு எதிராக விதி எடுத்திருக்கும் பழிவாங்கும் நடவடிக்கை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து