முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வெப்பச்சலனம் காரணமாக உள்தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆந்திராவில் வீசும் வெப்பக்காற்றை பொறுத்து தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்திய அளவில் கடந்தாண்டைவிட இந்த ஆண்டு 90 சதவீத  அளவுக்கு மழை இருக்கும் என பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து