முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 23, 27 தேதிகளில் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும் கூட்டுறவுத்தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: கூட்டுறவு சங்கத்தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் வரும் 23 மற்றும் 27 தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் முடிவுகள் அறிவிக்கப்படாது என்றும் கூட்டுறவுத்தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு வருமாறு:

அறிவுறுத்தல்...
சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி முதற்கட்டம் நிலை 2, 3 மற்றும் 4 ஆகியவற்றில் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சங்கங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட தேதிகள் இணைப்பு 1 முதல் 3-ல் கண்டுள்ளபடி வழங்கப்படுகின்றன. மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் அறிவிப்பு வழங்கப்பட்டு அறிவிப்புகள் நிறுத்தப்பட்டிருந்த முதற்கட்டம் நிலை 2, 3 மற்றும் 4 -ன் கீழ் வரும் சங்கங்களுக்கு தற்போது தேர்தல் ஆணையத்தால் இணைப்பு 1 முதல் 3-ல் கண்டுள்ள மாற்றம் செய்யப்பட்ட தேதிகளின்படி உரிய தேர்தல் அறிவிப்பினை வெளியிட மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு ஆணையத்தால் விதி எண் 52 (18)-ன் கீழ் அதிகாரம் அளிக்கப்படுகிறது. இதற்கான உரிய அறிவிப்பினை வழங்கிடவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அறிவிக்கக் கூடாது
இரண்டாம் நிலையில் தலைவர் துணைத்தலைவர் தேர்தல் மாற்றியமைக்கப்பட்ட 27ம் தேதியில் நடைபெற இருந்தாலும், அதன் முடிவுகளை தேர்தல் அலுவலர்கள் அறிவிக்க கூடாது. 3 மற்றும் 4-ம் நிலையில் கண்டுள்ள தேர்தல் நடவடிக்கைகளில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யலாம். தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய இடங்களுக்குச் சமமாகவோ, குறைவாகவோ வேட்பாளர்கள் எண்ணிக்கை இருந்தாலும், அவர்களைத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தல் கூடாது.

அறிவிக்கப்படவில்லை
தேர்ந்தெடுக்கப்படவேண்டிய இடங்களுக்கு அதிகமாக வேட்பாளர்கள் எண்ணிக்கை இருக்குமென்றால் தேர்தல் அறிவிப்பின்படி வாக்குப்பதிவும் குறிப்பிட்ட நாளில் நடைபெற ஏற்பாடு செய்யவேண்டும். குறிப்பிட்ட நாளில் வாக்குப்பதிவும் நடத்தவேண்டும். 3 மற்றும் 4 நிலைகள் பொறுத்தவரை உறுப்பினர் தேர்தல் முடிவு சுப்ரீம்கோர்ட் உத்தரவுவரும்வரை அறிவிக்கப்போவதில்லை என்பதால் தலைவர், துணைத்தலைவர் தேர்தலுக்கான கூட்ட அறிவிப்பு மற்றும் அதனை தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை.

23 மற்றும் 27-ம் தேதி...
தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் மாற்றியமைக்கப்பட்ட தேர்தல் திட்டம் தலைவர் / துணைத் தலைவர் தேர்தலுக்கானகூட்ட அறிவிப்பு, 23 மற்றும் 27ம் தேதியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகளை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அடிப்படையில் வெளியிடக்கூடாது என்பதாகும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து