பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு !

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      வர்த்தகம்
petrol in deisel(N)

டீசல், பெட்ரோல் விலை நேற்று கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உச்சத்தைத் தொட்டுள்ளன. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.74.08க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.10 காசுகளாக விற்பனையானது. அதற்குப் பின் இப்போதுதான் இந்த விலை உயர்வு வந்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை டீசல் ஒரு லிட்டர் ரூ.68.90 காசுகளுக்கும், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.76.85 காசுகளுக்கும் நேற்று விற்பனையானது. இதற்கு முன் சென்னையில் கடந்த 2014ம் ஆண்டு, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.93 காசுகள் விற்பனையானது. அதுதான் அதிகபட்சமான விலையாக இருந்தது. அதன்பின் ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்பின் அந்த விலை உயர்வை எட்டியுள்ளது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து