முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய இளையோர் தடகள போட்டி: பஞ்சாப் வீரர் தேசிய சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

கோவை: கோவையில் நடைபெற்று வரும் தேசிய இளையோர் தடகள போட்டியில் பஞ்சாப் வீரர் குரிந்தர்வீர் சிங் 100 மீ ஓட்டத்தில் 10.47 விநாடியில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார்.

தமிழ்நாடு தடகளச் சங்கம், கோவை மாவட்ட தடகளச் சங்கம், ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் இப்போட்டி, கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

இதில் 2-ஆம் நாளான சனிக்கிழமை, 16 முதல் 20 வயதுடைய ஆண்கள் பிரிவு 100 மீ ஓட்டத்தில் பஞ்சாப் வீரர் குரிந்தர்வீர் சிங் பந்தய தூரத்தை 10.47 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். முன்னதாக, கேரள வீரர் அகஸ்டின் ஜேசுதாஸ் 2013-இல் 10.57 விநாடியில் பந்தய தூரத்தை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது.
குரிந்தர்வீர் சிங்கை தொடர்ந்து, ஆகாஷ்குமார் (உத்தரப் பிரதேசம்) 3-ஆம் இடமும், பிரஜ்வால் மந்தனா (கர்நாடகம்) 3-ஆம் இடமும் பிடித்தனர்.

மகளிருக்கான 100 மீ ஓட்டத்தில் மகாராஷ்டிர வீராங்கனை சைத்ரலி குஜ்ஜார் 12.05 விநாடியில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார். விஜயகுமாரி (உத்தரப் பிரதேசம்) 2-ஆம் இடம், கந்தி நித்யா (தெலங்கானா) 3-ஆம் இடம் பிடித்தனர்.

110 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் தில்லி வீரர் குணால் சௌத்ரி 14.16 விநாடியில் முதல் வீரராக இலக்கை எட்டினார். முகமது ஃபயஸ் (கேரளம்), அல்தீன் நோரோன்ஹா (மகாராஷ்டிரம்) முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தனர்.

மகளிர் பிரிவில் ஜார்க்கண்ட் வீராங்கனை சப்னாகுமாரி பந்தய தூரத்தை 13.78 விநாடியில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார். பிரக்யான் பிரசாந்த் சாஹு (ஒடிஸா), நந்தினி கொங்கன் (தமிழகம்) முறையே 2, 3-ஆம் இடங்களை பிடித்தனர்.

100 மீ தொடர் ஓட்டம் ஆண்கள் பிரிவில் தமிழக வீரர்கள் பிரவீண்குமார், ஆனந்த்ராஜ், மகுனமுத்து, நிதின் சிதானந்த் ஆகியோரைக் கொண்ட அணி பந்தய தூரத்தை 41.60 விநாடியில் கடந்து முதலிடத்தையும், கர்நாடக அணி 2-ஆம் இடத்தையும், தெலங்கானா அணி 3-ஆம் இடத்தையும் பிடித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து