தேசமே கண் முழிச்சிக்கோ’ இயக்குநர் ஆர்.கண்ணன்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2018      சினிமா
indhuja

Source: provided

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, இந்துஜா, மேகா ஆகாஷ் நடிக்கும் ‘பூமராங்’ படத்துக்காக தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட நடனக் குழுவினரைக் கொண்டு ஒரு பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து இயக்குநர் ஆர்.கண்ணன் கூறும்போது ‘‘இப்பாடல் காட்சிக்கு பிருந்தா நடனம் அமைத்திருக்கிறார்.

பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள ‘தேசமே கண் முழிச்சிக்கோ கூட்டமா கைப் பிடிச்சிக்கோ’ என்று தொடங்கும் இப்பாடல் எதிர்பார்த்த மாதிரி அமைந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி.

அதர்வா, இந்துஜா உள்ளிட்ட குழுவினர் அடங்கிய இப்பாடல் தனித்து பேசப்படும். ‘பூமராங்’ திரைப்படம் மண் சார்ந்த படமாக உருவாகி வருகிறது. ஜூலையில் ரிலீஸ் செய்வோம்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து