முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபரத்தில் சாலைபாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பேரணியை கலெக்;டர் நடராஜன் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் சாலைபாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு வாகன பேரணியை கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்;துத்துறை மற்றும் காவல்துறையின் சார்பாக 29-வது சாலை பாதுகாப்பு வாரவிழா வரும் 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் தொடக்கமாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாகன பேரணி ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முகாம் அலுவலகம் அருகில் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா முன்னிலை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் வரவேற்று பேசினார். விழாவில், மாவட்ட கலெக்டர் நடராஜன் பேரணியை தொடங்கி வைத்தனர். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பழைய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. அப்போது சாலை விபத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த செயல்முறை விளக்கமும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் நடராஜன் பேசியதாவது:- தமிழ்நாடு அரசின் அறிவுருத்தலின்படி, பொது மக்களிடையே சாலைப் பயணங்களின் போது பாதுகாப்பான முறையில் பயணித்திட வேண்டுமென்ற எண்ணத்தை வலியுறுத்தும் விதமாக ஆண்டு தோறும் சாலைப் பாதுகாப்பு வாரவிழா ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிபடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் 29-ந் தேதி வரை 7 நாட்கள் இந்த வாரவிழா நடைபெறுகிறது. இந்த 7 நாட்களில் போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையின் சார்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
குறிப்பாக இன்று ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனங்கள், காவல்துறை ஓட்டுநர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் அரசு சாரா அமைப்பினர் பங்கேற்ற விழிப்புணர்வு வாகனப் பேரணி நடத்தப்படுகின்றது.  தொடர்ந்து 24-ந் தேதி இருசக்கர வாகன முகவர்கள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு பேரணியும், 25-ந் தேதி உச்சநீதிமன்ற சாலைப்பாதுகாப்பு குழு அறிவுறுத்தலின்பேரில் ஆறு போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும், 26-ந் தேதி மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களைச் சார்ந்த வாகன ஓட்டுநர்கள், தனியார் நிறுவன வாகன ஓட்டுநர்கள், சுகாதாரத்துறை, 108 ஆம்புலன்ஸ் சார்ந்த அலுவலர்களுடன் விபத்து தவிர்ப்பு குறித்த ஆலோசனை நிகழ்ச்சியும், 27-ந் தேதி சுங்கச்சாவடி மையங்களில் சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், 28-ந் தேதி பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், வாரச்சந்தைகள், ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், 29-ந் தேதி அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், சோதனைச்சாவடிகள், அரசுப் போக்குவரத்து கழகங்கள் மற்றும் பணிமனைகளில் சாலைப்பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள்  சாலையில் பயணிக்கும்; மிதமான வேகத்தில் சாலை விதிகளைப் பின்பற்றி தங்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும்பொழுது அலைபேசி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்திட வேண்;டும். தலைக்கவசம் (ஹெல்மட்) அணிந்து பயணம் மேற்கொள்வதை அனைவரும் பின்பற்ற வேண்டும். மேலும், மது அருந்திவிட்டு கட்டாயம் வாகனம்  ஓட்டக்கூடாது.  சாலை விபத்து மற்றும் அவசர சூழ்நிலையில் மனித உயிர்களை காப்பாற்றும் பொருட்டு, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அவசர விபத்து சிகிச்சை மையங்கள் செயல்படுத்தப்படுவதோடு,  சாலை விபத்துகளில் சிக்கும் வாகனங்களை, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் அப்புறப்படுத்த 24 மணிநேரமும் நெடுஞ்சாலை ரோந்துப்பணி காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை தவறாமல் பின்பற்றி, பாதுகாப்பான முறையில் வாகனங்களை ஓட்டி தமிழகத்தினை சாலை விபத்துகள் அற்ற மாநிலமாக உருவாக்கிட வேண்டும். இவ்வாறு பேசினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு(பயிற்சி) பிரவீன் டோங்ரே, ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கயிலை செல்வம், இயக்கூர்தி ஆய்வாளர் விஸ்வநாதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் வெ.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து