முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் தி.மு.க கூட்டணி கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்:

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்-காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்ட மாபெரும் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மு.மணிமாறன் மற்றும் பி.மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது திருமங்கலம் மதுரை சாலையில் போக்குவரத்து நெரிசல் எற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க கூட்டணி கட்சிகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுமென தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்ற மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்திற்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மு.மணிமாறன்,வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பி.மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.முன்னாள் சபாநாயகர் சேடபட்டி இரா.முத்தையா முன்னிலை வகித்தார்.திருமங்கலம் மதுரை சாலையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும்,உச்சநீதிமன்ற உத்தரவை அமல் படுத்திடாத மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.அப்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் திருமங்கலம் மதுரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஆர்.ஜெயராம்,ஆலத்தூர் ரவிச்சந்திரன்,மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் காளிதாஸ்,ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கதிரேசன்,மாரநாடு,விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் இன்குலாப்,ஆதிதமிழர் பேரவை செயலாளர் விடுதலைநேசன்,முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சாமிநாதன்,லதாஅதியமான்,மாவட்ட துணை செயலாளர் முருகன்,நகரச் செயலாளர் நாகராஜ்,ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி,தனபாண்டியன்,ராமமூர்த்தி,தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் பாசபிரபு கட்சி மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து