முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம் பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து சட்டமன்றப் பேரவை குழுவினர் ஆய்வு.

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- இராமேஸ்வரம் பகுதியில் தமிழக அரசு சார்பாக சிறுவர் பூங்கா புதுபித்தல், மீன்பிடித்தலம் அமைத்தல் உள்பட பலகோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்

ராமேசுவரம் பகுதிக்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுத் தலைவர் இராமசாமி மற்றும் குழு உறுப்பினர்களான தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் (சிங்காநல்லூர்) செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி) தனியரசு (காங்கேயம்) முனைவர்.பழனிவேல் தியாகராஜன் (மதுரை) மாணிக்கம் (சோழவந்தான்) ஆகியோர்கள் நேற்று காலையில் வருகை தந்தனர்,இவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் வரவேற்றார் அதன் பின்னர் ராமேசுவரம் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் மூலம் இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசணை நடத்தினர். அதன் பின்னர் முதலாவதாக இராமேஸ்வரம் நகராட்சியின் மூலம் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே அம்ருத் திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பூங்காவில்; ரூ.49.50 இலட்சம் ரூபாய் மதிப்பில்; பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் பொழுதுபோக்கும் வகையில் வாட்டர் பவுண்டெயின், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களோடு பூங்கா சீரமைப்பு பணிகள் உள்பட மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்கள். பின்னர்
இராமேஸ்வரம் கோயிலுக்கு வருகை தரும் யாத்திரிகர்கள் பயன்பெறும் வகையில் இராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே திருக்கோயில் நிதியில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.29 கோடி மதிப்பில் புதிதாக 100 தங்கும் அறைகளுடன் சுமார் 500க்கும் மேற்பட்ட யாத்திரைகள் தங்கி பயன்பெறும் வகையில் கட்டப்பட்டு வரும் கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்கள்.அதன்பிறகு, மீனவர்கள் நலனுக்காக மீன்வளத்துறையின் மூலம் தனுஷ்கோடி அருகேயுள்ள முகுந்தராயர்சத்திரத்தில் ரூ.7.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மீன்பிடி இறங்கு தளத்தினையும், ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்திடும் வகையில் குந்துகால் பகுதியில் ரூ.70 கோடி மதிப்பில் புதிதாக மீன்பிடி இறங்குதளம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினையும் ஆய்வு செய்தார்கள். அதன்பிறகு, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், தங்கச்சிமடம் ஊராட்சியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.31.52 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தினையும் ஆய்வு செய்தார்கள்.இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், கூடுதல் செயலாளர் வசந்திமலர், துணைச் செயலாளர் தேன்மொழி, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) உமாமகேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தினகரன், உதவி செயற்பொறியாளர்கள் குருதிவேல்மாறன்,.நாகரத்தினம், மீன்வளத்துறை துணை இயக்குநர் ஐசக் ஜெயக்குமார் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து