முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையத்தில் ராம்கோ குரூப் ஸ்தாபகர் பி.ஏ.சி ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம், - ராஜபாளையத்தில் ராம்கோ குரூப் ஸ்தாபகர் பி.ஏ.சி ராமசாமிராஜா 124-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் பி.ஏ.சி ராமசாமிராஜா நினைவாலயத்தில் பி.ஏ.சி ராமசாமிராஜா நினைவு இசைப்பள்ளி குழுவினரின் கீர்தனாஞ்சலியும் அதனை தொடர்ந்து புஷ்பாஞ்சாலியும் நடைபெற்றது. இதில் ராம்கோ குரூப் சேர்மன்  பி.ஆர் வெங்கட்ராமராஜா கலந்து கொண்டு நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழாவில் ராம்கோ சேர்மன் குடும்பத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சொக்கர் கோயிலில் பி.ஏ.சி ராமசாமிராஜா திருவுருவப் படத்திற்கும் ஜோதிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஜோதி ஓட்டத்தை ராம்கோ குரூப் சேர்மன்  பி.ஆர்.வெங்கட்ராம ராஜா துவக்கி வைத்து ராமமந்திரம் அருகில் உள்ள ராமசாமி ராஜா திருவுருவ சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினார். அதை தொடர்ந்து தொடர் ஜோதி ஒட்டம் திருவில்லிபுத்தூர், சிவகாசி மத்திசேனை, சங்கரலிங்காபுரம் வழியாக துலுக்கப்பட்டியில் உள்ள ராம்கோ நகருக்கு சென்றடைந்தது. மாலையில் ஜவஹர் மைதானத்தில் டாக்டர்.தியாகராஜன் குழுவினரின் நாதசங்கமம் மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து