முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது இ-சேவை மைய நிர்வாகிகளுக்கு ஜிஎஸ்டி பைல் செய்வது குறித்த பயிற்சி

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018      தேனி
Image Unavailable

போடி -  பொது இ-சேவை மைய நிர்வாகிகளுக்கு ஜி.எஸ்.டி. பைல் செய்வது குறித்த பயிற்சி வகுப்பு சின்னமனூரில் நடைபெற்றது.
     கோவை கௌவ் ரிப்போட்ஸ் (GovReports) மென்பொருள் நிறுவனம், மத்திய அரசின் சி.எஸ்.சி. இணைந்து நடத்திய, மத்திய அரசின் கீழ் இயங்கும் பொது இ-சேவை மையங்களை நடத்தும் கிராம அளவிலான தொழில்முனைவோருக்கு ஜி.எஸ்.டி. ரிட்டன் பைல் செய்வது குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு சின்னமனூரில் தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
      மத்திய அரசின் சி.எஸ்.சி. தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார். தேனி மாவட்ட பொது சேவை மையங்களின் கிராம அளவிலான தொழில்முனைவோர் கூட்டமைப்பு செயலாளர்  பா.மணிகண்டராஜா முன்னிலை வகித்தார்.
துணை செயலாளர் ரெஜினா வரவேற்றார். பொருளாளர் க.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
     பயிற்சி வகுப்புகளை கௌவ் ரிப்போர்ட்ஸ் மென்பொருள் நிறுவன நிர்வாக இயக்குநர் நாகராஜ் வீரசெட்டியார் தலைமையிலான குழுவினர் நடத்தினர். இதில் புதிதாக ஜி.எஸ்.டி. பதிவு எண் பெறுவது, ஜி.எஸ்.டி. பதிவு எண் பெற்றவர்கள் மாதா மாதம் எளிய முறையில் ரிட்டன் பைல் செய்வது, ரிட்டன் பைல் செய்வதன் வகைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
     மேலும் ஆன்லைன் முறையில் செயல்முறை விளக்கமும் விரிவாக செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சி முடித்த கிராம அளவிலான தொழில்முனைவோருக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  இதன் மூலம் பயிற்சி பெற்ற பொது இ-சேவை மையங்களில் ஜி.எஸ்.டி. பதிவு எண் பெற விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொண்டு புதிதாக பதிவு எண் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் ஏற்கனவே ஜி.எஸ்.டி. பதிவு எண் பெற்றவர்கள் தங்கள் ரிட்டன்களை பொது இ-சேவை மையங்கள் மூலமாக தாக்கல் செய்து பயன் பெறலாம். இதன் மூலம் தாமதமாக ரிட்டன் செய்வதால் அபராதம் விதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம் என விளக்கப்பட்டது.
     பயிற்சி வகுப்பு ஏற்பாடுகளை தேனி மாவட்ட பொது சேவை மையங்களின் கிராம அளவிலான தொழில்முனைவோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் செய்திருந்தனர். பயிற்சி முடிவில் கூட்டமைப்பின் செயலாளர் பா.மணிகண்டராஜா கூறுகையில் தேனி மாவட்டத்தில் புதிதாக ஜி.எஸ்.டி. பதிவு செய்ய விரும்பும் வர்த்தகர்கள், ஜி.எஸ்.டி. ரிட்டன் பைல் செய்ய விரும்பும் வர்த்தர்கள் மத்திய அரசின் கீழ் இயங்கும் பொது இ-சேவை மையங்களை அணுகலாம் என்றார்.
 
    
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து